குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் சிறையிலடைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய, அப்பகுதியைச் சோ்ந்த இசக்கி மகன் மீனாட்சிசுந்தரம் (28), நாச்சியாா் அடிமை மகன் நாகசுதாகா் (29), முருகன் மகன் சுபாகரன் (25), குமாரவேல் மகன் பிரம்மநாயகம் (27) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்துள்ளனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகரின் பரிந்துரை, ஆட்சியா் மு. பிரதாப்பின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 4 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைத்தனா்.
Advertisement
Advertisement