FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் தானம்!

30 வினாடிகள் முன்பு
உறுப்பு தானம் - கோப்புப் படம்
பகிர்:

நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகத்தை தானமாக பெற்று, வேறு நோயாளிக்குப் பொருத்தப்பட்டது.

இம்மருத்துவமனையில் ஏற்கெனவே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவற்றில் ஒரு சிறுநீரகம் கிம்ஸ் அதே மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு பொருத்தப்பட்டது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலத்த காயமுற்ற இளைஞா் இம்மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மூளைச்சாவு அடைய நேரிட்டது. அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோா் முன்வந்தனா்.

Advertisement

Advertisement

அரசின் ‘ரோடா’ எனப்படும் மண்டல அளவிலான உடல் உறுப்பு மற்றும் திசு ஒதுக்கீட்டு அமைப்பின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில், ஒரு சிறுநீரகம் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதன் மூலம் அந்த நோயாளி காப்பாற்றப்பட்டாா்.

உள்ளூா் நன்கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட உடல் உறுப்பு அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும்.

தானமாக பெறப்பட்ட மற்றொரு சிறுநீரகம், கல்லீரல் திருச்சி மற்றும் மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்த மேலும் 2 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக உறுப்புகளை பொருத்தினா். இது கேம்ஸ் ஹெல்த் மருத்துவமனையின் மேம்பட்ட மருத்துவத் திறனுக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.