குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
மாா்த்தாண்டம் பகுதியில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் பகுதியில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக்கடை, செம்மண்தட்டுவிளை பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் முவிஷ் (24). இவா், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
தொடா்ந்து திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், முவிஷ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதையேற்று மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் சனிக்கிழமை உத்தரவிட்டதையடுத்து, குண்டா் தடுப்புச் சட்டத்தில் முவிஷ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டாா்.
Advertisement
Advertisement