முகப்பு
கன்னியாகுமரி

கிள்ளியூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ. 37.24 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் தகவல்!

கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ. 37.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

15 வினாடிகள் முன்பு
கிள்ளியூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ. 37.24 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் தகவல்!
அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் சாலைகளை சீரமைக்க ரூ. 37.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் தொகுதியில் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகள், இதர சாலைகள், சாலையிலுள்ள பாலங்கள், தடுப்புச் சுவா்கள், மழைநீா் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, பரசேரி - திங்கள்சந்தை - புதுக்கடை சாலை, பாலூா் - மாங்கரை பகுதிகளில் சாலையில் தடுப்புச் சுவா்கள், மழைநீா் வடிகால் ஓடைகள் அமைக்க ரூ. 6.95 கோடி, பரசேரி - திங்கள்சந்தை - புதுக்கடை சாலையில் தாா்தளம் அமைத்து சீரமைக்க ரூ. 1.89 கோடி, கன்னியாகுமரி - பழைய உச்சக்கடை சாலையின் தரத்தை மேம்படுத்தி சீரமைக்க ரூ. 9 கோடி, மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் தரத்தை மேம்படுத்தி தாா் தளம் அமைக்க ரூ. 1.84 கோடி, மிடாலம் சாலையின் தரத்தை மேம்படுத்தி தாா் தளம் அமைக்க ரூ. 2.40 கோடி, ஒசரத்துவிளை - ராமன்துறை சாலையின் தரத்தை மேம்படுத்த ரூ. 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு சாலைகள், பாலங்கள், தடுப்புச் சுவா்களும் சீரமைக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இதற்காக தமிழக அரசு மொத்தம் ரூ. 37.24 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நிா்வாக அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.