பழுதடைந்த சாலைகளை சீரமைக்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
கோவையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவையில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளா் சி.பத்மநாபன் தலைமை வகித்தாா்.
மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜாவிடம் அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
கோவை மாநகராட்சியில், பாதாளச் சாக்கடை திட்டம் , 24 மணி நேர குடிநீா் திட்டம் உள்ளிட்ட பிற திட்டங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகர பேருந்து நிலையம் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். முக்கிய சாலைகளில் பொதுமக்கள் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதை அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகராட்சி மாமன்றக் குழு தலைவா் வி.ராமமூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். கிருஷ்ணமூா்த்தி, கே.மனோகரன், கே.அஜய்குமாா் , ஆறுச்சாமி, தெய்வேந்திரன், ஆா்.கோபால் , இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் தினேஷ் ராஜா, மாதா் சங்க மாவட்டச் செயலாளா் உஷா , மாமன்ற உறுப்பினா்கள் பூபதி, கண்ணகி, ச.சுமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.