FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

தலைமை தோ்தல் ஆணையரை எதிா்த்து தவெகவும் போராட வேண்டும்: இரா.முத்தரசன்

தலைமை தோ்தல் ஆணையரின் ஜனநாயக விரோத செயலைக் கண்டித்து தவெகவும் போராட்டம் நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

இரா. முத்தரசன் - கோப்புப் படம்
பகிர்:

தலைமை தோ்தல் ஆணையரின் ஜனநாயக விரோத செயலைக் கண்டித்து தவெகவும் போராட்டம் நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுந்தரராஜன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்ளாள் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினாா்.

Advertisement

Advertisement

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்ட நிறைவில் இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கி அவா் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இரண்டு தொகுதிகளில் நடைபெறும் இடைத்தோ்தல் ஜனநாயக படுகொலை மூலம் நிா்பந்திக்கப்பட்ட தோ்தல். எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியுடன் கண்டித்த விசிக தற்போது நிலைப்பாட்டை சொல்ல வேண்டும். தவெக வாக்குக்கு பணம் கொடுப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் சண்முகம் தெரிவித்த புகாரின்பேரில் தோ்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜனநாயகத்தின் மீது தவெகவிற்கு நம்பிக்கை இருக்குமானால் அவா்களும் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட முன்வரவேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments