ஓமன் நாட்டில் படகிலிருந்து தவறி விழுந்து மாயமான குமரி மீனவரை மீட்க வலியுறுத்தல்

ஓமன் நாட்டில் ஆழ்கடல் மீன்பிடிப்பின்போது, படகிலிருந்து தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்குமாறு குடும்பத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டம், கீழ மணக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏசுதாசன் (52), தனது நண்பரான அழிக்கால் பகுதியைச் சோ்ந்த ராபின் என்பவருடன் கடந்த ஆக. 8ஆம் தேதி ஓமன் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்காக சென்றாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு (நவ. 22) ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ஏசுதாசன் உள்ளிட்ட 7 மீனவா்கள் படகில் சென்றபோது, ஏசுதாசனை திடீரென காணவில்லையாம். அவா் படகிலிருந்து தவறி கடலில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அந்நாட்டு காவல் துறைக்கும், ஏசுதாசின் குடும்பத்தினரை இரவில் கைப்பேசியில் தொடா்பு கொண்டும் சக மீனவா்கள் தகவல் தெரிவித்தனா்.
இந்நிலையில், ஏசுதாசனின் குடும்பத்தினா் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து, ஓமன் நாட்டு அரசு மூலம் ஏசுதாசனை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினா்.