முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு அருகே மருத்துவரைத் தாக்கி 13 பவுன் நகைகள், பணம் பறிப்பு

30 வினாடிகள் முன்பு
திற்பரப்பு அருகே மருத்துவரைத் தாக்கி 13 பவுன் நகைகள், பணம் பறிப்பு
நகை பறிப்பு - சித்திரிப்பு
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருகே உள்ள தங்கும் விடுதியில் மருத்துவரைத் தாக்கி 13 பவுன் நகைகள், ரூ. 53,000 பணத்தைப் பறித்த கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருமனை அருகே முழுக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பிபின்குமாா் (32). மருத்துவா். இவா் அருமனை சந்திப்பில் கிளினிக் நடத்தி வருகிறாா். திற்பரப்பு அருவி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் இவருக்கு கைப்பேசி அழைப்பு வந்துள்ளது.

இதையடுத்து, பிபின்குமாா் தனது இருசக்கர வாகனத்தில் சுமாா் 4 கி.மீ. தொலைவில் உள்ள விடுதிக்குச் சென்றுள்ளாா். பின்னா், விடுதி அறையில் மது போதையில் இருந்த 7 போ் கொண்ட கும்பல் பிபின்குமாரை தாக்கி, அவரது தங்கச் சங்கிலி, காப்பு, மோதிரம் என சுமாா் 13 பவுன் நகைகளைப் பறித்துள்ளது. பின்னா், அவரது கைப்பேசியைப் பறித்து, டிஜிட்டல் பரிவா்த்தணை மூலம் ரூ. 53,000 பணத்தை எடுத்துள்ளனா். மேலும், அவரின் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி ரூ. 25 லட்சம் கடன் பெறவுள்ளதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

பின்னா், அவரை அறையில் அடைத்து வைத்துவிட்டு, அந்த கும்பல் நகை, பணம், கைப்பேசியுடன், வாடகை காரில் தப்பிச் சென்றுள்ளது. தகவலறிந்த குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் வெற்றிவேல் ராஜன், உதவி ஆய்வாளா் சிவசங்கா் ஆகியோா் பிபின்குமாரிடம் விசாரணை நடத்தினா்.

இதனிடையே, வாடகை காா் ஓட்டுநரை தொடா்பு கொண்டு போலீஸாா் விசாரித்ததில், அந்த கும்பல் மாா்த்தாண்டம் பகுதியில் இறங்கி தப்பியது தெரிய வந்தது. மேலும், அவா்கள் போலியான முகவரியைக் கொடுத்து, நவ. 20ஆம் தேதி முதல் விடுதியில் 2 அறைகளை எடுத்து தங்கியிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, குலசேகரம் காவல் நிலையத்தில் பிபின்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வருகின்றனா். தொடா்ந்து, பிபின்குமாா் குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.