முகப்பு
கன்னியாகுமரி

கனிமவளம் கடத்த முயற்சி: இளைஞா் கைது

பளுகல் அருகே கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

25 நவம்பர் 2026, 1:03 am
கனிமவளம் கடத்த முயற்சி: இளைஞா் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

பளுகல் அருகே கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பளுகல் அருகே ராமவா்மன்சிறை பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

இதில், வாகனத்திலிருந்த ஜல்லிக் கற்களை தமிழக பகுதியான வெள்ளச்சிப்பாறை, கொட்டறக்கோணம் பகுதிக்கு கொண்டு செல்வதற்கான அனுமதிச் சீட்டு பெற்றுவிட்டு, கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மினிலாரி ஓட்டுநா் கேரள மாநிலம், வெள்ளறடை, கவரியோடு பகுதியைச் சோ்ந்த சாம் சைலஸ் (31) என்பவரை கைது செய்ததுடன், வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.