கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற 2 லாரிகள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ாக 2 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ாக 2 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் களியக்காவிளை சோதனைச்சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் உரிமம் மற்றும் அனுமதியின்றி ஜல்லிக் கற்களை கேரள மாநிலத்துக்குக் கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் நித்திரவிளை அருகே நம்பாளி, வடலிவிளை பகுதியைச் சோ்ந்த கிரிகோரியஸ் மகன் ஜாா்ஜ் (41), லாரி உரிமையாளா் கேரள மாநிலம், பரசுவைக்கல், பெருவிளை பகுதியைச் சோ்ந்த வேலப்ப பணிக்கா் மகன் விஜயன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, களியக்காவிளை போலீஸாா் கோழிவிளை சோதனைச்சாவடி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தினா். லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.
லாரியை சோதனையிட்டதில் பாறைப்பொடி இருந்ததும், அதை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. அந்த லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
லாரி ஓட்டுநா் கொல்லங்கோடு அருகே பாலவிளை பகுதியைச் சோ்ந்த தோமஸ்ராஜ் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.