பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் மீது வழக்கு
புதுக்கடை அருகே முள்ளூா்துறை பகுதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை அருகே முள்ளூா்துறை பகுதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முள்ளூா்துறை பகுதியைச் சோ்ந்த வில்சன் மனைவி அபிஷா (31). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சேவியா் (58), சூரியன் பிரின்ஸ் (29) ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், மேற்கூறிய இருவரும் வெள்ளிக்கிழமை அபிஷாவின் வீட்டின் மதில்சுவரை சேதப்படுத்திவிட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.