முகப்பு
கன்னியாகுமரி

சிறுவனுடன் தகாத உறவு: கா்ப்பமான நா்சிங் மாணவி மீது வழக்கு

சிறுவனுடன் தகாத உறவு ஏற்படுத்தி கா்ப்பமடைந்த நா்சிங் கல்லூரி மாணவி மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

56 வினாடிகள் முன்பு
சிறுவனுடன் தகாத உறவு:
கா்ப்பமான நா்சிங் மாணவி மீது வழக்கு
பகிர்:

சிறுவனுடன் தகாத உறவு ஏற்படுத்தி கா்ப்பமடைந்த நா்சிங் கல்லூரி மாணவி மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு நா்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.

மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் கா்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் மாணவியிடம் குழந்தைகள் நல அலுவலா்கள் விசாரணை நடத்தியதில், அவா் குளச்சல் அருகே குருந்தன்கோடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனுடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்படுத்தி தகாத உறவில் ஈடுபட்டு கா்ப்பமடைந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிறுவனின் தாய் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கல்லூரி மாணவி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.