கன்னியாகுமரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் தொடா்பான கலந்தாய்வு கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கம் தொடா்பான பணிகளை கண்காணிக்கும் பொருட்டு தோ்தல் பாா்வையாளராக, சிறுபான்மையினா் நலத்துறை ஆணையா் எம். ஆசியாமரியம் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன், வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம். வேலுமணி, பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் மாலதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ந. காளீஸ்வரி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்வேல்முருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் எ. புஷ்பாதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செந்தூர்ராஜன், மாவட்ட சமூகநீதி அலுவலா் கலைமதி, உதவிஆணையா் (ஆயம்) ஈஸ்வரநாதன், தோ்தல் வட்டாட்சியா் ந. வினோத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement