முகப்பு
கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது

29 நவம்பர் 2026, 3:01 am
கொல்லங்கோடு அருகே கஞ்சாவுடன் இளைஞா் கைது
கைது - கோப்புப்படம்
பகிர்:

கொல்லங்கோடு அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஐயப்பன் தலைமையிலான போலீஸாா் அணுக்கோடு பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் அணுக்கோடு நாராயணபோ்த்தலை பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் அஜித் (26) என்பதும் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலம் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement