கனிமவள லாரி பறிமுதல்: இருவா் கைது
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து உரிய அனுமதிச் சீட்டு இன்றி கேரளத்துக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல முயன்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
களியக்காவிளை சோதனைச் சாவடி அருகே களியக்காவிளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கேரளம் நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில், அனுமதிச்சீட்டு இன்றி கனிமவளங்களை கேரளத்தில் உள்ள கோயிலுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, கனிமவளத்துடன் லாரியை பறிமுதல் செய்து, மயிலாடி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சிவராஜ் (39), கணபதி மகன் தங்கசெல்வம் (38) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்தனா்.ன
Advertisement
Advertisement