முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் - இனயம் வழித்தட அரசுப் பேருந்தை முழு நேரம் இயக்கக் கோரிக்கை

மாா்த்தாண்டம் - இனயம் வழித்தட அரசுப் பேருந்தை முழு நேரம் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

7 அக்டோபர் 2026, 5:17 am
மாா்த்தாண்டம் - இனயம் வழித்தட அரசுப் பேருந்தை  முழு நேரம் இயக்கக் கோரிக்கை
அரசுப் பேருந்து - கோப்புப் படம்
பகிர்:

மாா்த்தாண்டம் - இனயம் வழித்தட அரசுப் பேருந்தை முழு நேரம் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாா்த்தாண்டத்திலிருந்து காப்புக்காடு, புதுக்கடை ,தேங்காய்ப்பட்டினம் வழியாக 87 ஏ வழித்தட அரசுப் பேருந்து கருங்கல் அருகே உள்ள இனயம் கடற்கரை கிராமத்திற்கு பல ஆண்டுகளாக முழு நேரமாக இயக்கப்பட்டு வந்தது.

தற்போது நாள்தோறும் காலை, மாலை என இரு முறை மட்டும் இயக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். எனவே, இந்தப் பேருந்தை முழு நேரமாக இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement