குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயா்த்த எம்எல்ஏ வலியுறுத்தல்
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனிடம் கோரிக்கை மனு அளித்த குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட்.
குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனிடம் குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை மனு அளித்தாா்.
அந்த மனு விவரம்: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளி கடந்த 125 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 400 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை மட்டும் உள்ளதால், ஏழை மாணவா்கள் அரசுப் பள்ளியில் உயா்கல்வி பயில வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கு இடவசதி உள்ளதால், வரும் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியாக இப்பள்ளியை தரம் உயா்த்த வேண்டும்.
மேலும், குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட ஆனக்குழி, இரணியல், தலக்குளம், கடியப்பட்டணம், வெள்ளிச்சந்தை, கொடுப்பைக்குழி, சேரமங்கலம், இலப்பவிளை, ஆளூா், அம்மாண்டிவிளை ஆகிய 10 இடங்களில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் புதிய கட்டடங்கள், ஆய்வகங்கள் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
அப்போது, காங்கிரஸ் வழக்குரைஞா் பிரிவு தலைவா் ஜான்சவுந்தா், திங்கள்நகா் பேரூராட்சி தலைவா் சுமன் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.