FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே மது விற்றவா் கைது

19 அக்டோபர் 2026, 12:33 am IST
கைது
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (63). இவரது வீட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, நாகேந்திரனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments