FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பெட்டிக் கடையில் மது விற்றவா் கைது

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் மது விற்றதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் மது விற்றதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே பிலாங்காலவிளை பகுதியில் மாா்த்தாண்டம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் உள்ள திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (64) என்பவரின் பெட்டிக் கடையில் சோதனை செய்தனா்.

அங்கு சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 48 மதுபாட்டில்களைப் போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், செல்வராஜ் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments