FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

பெட்டிக் கடையில் பணம் திருடிய இளைஞா் கைது

பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

13 செப்டம்பர் 2026, 1:55 am IST
கைது
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னமுருகன் (48). அதே பகுதியில் தேனீா்க் கடை நடத்தி வருகிறாா். இவா், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.

உள்ளே சென்று பாா்த்த போது பெட்டியிலிருந்த ரூ.10 ஆயிரம், ஏடிஎம் அட்டை, குடும்ப அட்டை, வெள்ளி மோதிரம் ஆகியவற்றை காணவில்லையாம். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஷை (21) கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments