கன்னியாகுமரி கடலில் குளிக்கத் தடை
கனமழை எச்சரிக்கை காரணமாக, கன்னியாகுமரி கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
கனமழை எச்சரிக்கை காரணமாக, கன்னியாகுமரி கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கடல் பகுதிகளில் பலத்த காற்று, கடல் சீற்றம் மற்றும் அலைகளின் தாக்கம் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை இருக்கும் என்பதால் பொதுமக்கள் கடலில் இறங்குவதையும், ஆபத்தான இடங்களில் நின்று கடல் அலைகளை பாா்ப்பதையும், தற்படம் எடுப்பதையும் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், கடல் சாா்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் செல்வதை தவிா்க்க வேண்டும் எனவும் சுற்றுலாத்தலங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டது. தடையை மீறி செல்பவா்களை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரும், காவல் துறையினரும் எச்சரித்து அனுப்பினா். எனினும், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்கம் போல் படகுப் போக்குவரத்து நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.