FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

26 அக்டோபர் 2026, 3:00 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

நித்திரவிளை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டாா்.

நித்திரவிளை அருகே கிராத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின்ராஜ் மகன் ஜெபின்ராஜ் (21). கஞ்சா விற்ற இவரை, நித்திரவிளை போலீஸாா் அண்மையில் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

போதைப் பொருள்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஜெபின்ராஜ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் பரிந்துரை செய்தாா்.

Advertisement

Advertisement

இதன் அடிப்படையில், ஜெபின்ராஜை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து அவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments