களியக்காவிளை அருகே தலைமறைவு குற்றவாளி கைது
களியக்காவிளை அருகே அடிதடி வழக்கில் நீதிமன்ற பிடியாணை பிறப்பட்டு, ஓராண்டாகத் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகேயுள்ள கோழிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரவீந்திரன் மகன் ஸ்ரீதரன். இவா் மீது அடிதடி வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்தாா். இவரைக் கண்டறிந்து கைது செய்ய களியக்காவிளை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளா் பரமேஸ்வரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா், தலைமறைவாக இருந்த ஸ்ரீதரனை திங்கள்கிழமை கைது செய்து, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.