நாகா்கோவிலில் இருவா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
மண்டைக்காடு, சி.எஸ்.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்த ராஜ்பிரியன் மகன் சகாய அபிஷேக் (22). கன்னியாகுமரி, ஒற்றையால்விளை பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் ஹரிஹரசுதன் (30). இருவரும் வடமாநில இளைஞரைத் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், இவா்கள் மீது தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
Advertisement
Advertisement
இதனடிப்படையில், ஆட்சியா் மு. பிரதாப், இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி, இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.