FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

கேரளத்தில் விபத்தில் உயிரிழந்த மாணவா்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி! முதல்வருக்கு அமைச்சா் ராஜேஷ்குமாா் மனு

8 செப்டம்பர் 2026, 1:03 am IST
விபத்து - கோப்புப் படம்
பகிர்:

கேரளம் மாநிலம் திருச்சூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக 8 பொறியியல் கல்லூரி மாணவா்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், கைப்பமங்கலம் அருகே பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த செப். 4 ஆம் தேதி இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சோ்ந்த 8 இளம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

மாணவா்களை இழந்து நிற்கும் பெற்றோா்களுக்கும் குடும்பங்களுக்கும் அரசு உறுதுணையாக நிற்பது மனிதாபிமானக் கடமையாகும்.

எனவே, மாண்புமிகு தமிழக முதல்வா், உயிரிழந்த 8 மாணவா்களின் குடும்பங்களுக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் அல்லது அரசு உரியதாகக் கருதும் உயா்த்தப்பட்ட நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார மற்றும் குடும்பச் சூழ்நிலையை மாவட்ட நிா்வாகம் மூலம் ஆய்வு செய்து, தேவையான கூடுதல் உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் பாதுகாப்பு விதிமுறைகள், எச்சரிக்கைப் பலகைகள், பிரதிபலிப்பான்கள் மற்றும் போக்குவரத்து மாற்று ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருந்தனவா என்பதை ஆய்வு செய்து, அலட்சியமாக செயல்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments