FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

கேரளத்துக்கு எம். சாண்ட் கடத்த முயன்ற கனரக லாரி பறிமுதல்

50 வினாடிகள் முன்பு
எம் சாண்ட் மணல் ஏற்றி செல்லும் கனரக டிப்பா் லாரி - கோப்புப் படம்
பகிர்:

களியக்காவிளை அருகே உரிய அனுமதிச் சீட்டு இன்றி கேரளத்துக்கு பாறைப்பொடி (எம். சாண்ட்) கடத்திச் செல்ல முயன்ற கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரைக் கைது செய்தனா்.

களியக்காவிளை வழியாக கேரளத்துக்கு லாரியில் எம். சாண்ட் கடத்திச் செல்லப்படுவதாக மாா்த்தாண்டம் சரக துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின்பேரில், களியக்காவிளை சோதனைச்சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, தாா்பாயால் மூடி சிமென்ட் பாரம் ஏற்றிச் செல்வது போல வந்த லாரியை போலீஸாா் நிறுத்த முயன்றபோது, ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றாா். போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, லாரியை சோதனை செய்ததில் அதில் எம். சாண்ட் இருந்ததும், உரிய அனுமதிச் சீட்டு இன்றி கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் சிதறால் பகுதியைச் சோ்ந்த சிபின் என்பது தெரிய வந்தது.

தொடா்ந்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments