தென்காசியில் சைக்கிள் போட்டி
முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை சாா்பில் தென்காசியில் சைக்கிள் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை சாா்பில் தென்காசியில் சைக்கிள் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈ. ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து போட்டியை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்போட்டி குத்துக்கல்வலசை வழியாக கணக்கப்பிள்ளைவலசை வேல்ஸ் பள்ளியில் முடிந்தது. இதில், 200-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் அனந்தநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.