FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

தென்காசி சிவசைலம் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தென்காசி மாவட்டம் சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மன் உடனாய ஸ்ரீ சிவசைலநாத சாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூன் 2022, 1:54 pm IST
சிவசைலம் ஸ்ரீ சிவசைல நாதர் உடனுறை பரமகல்யாணி கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.
பகிர்:

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் சிவசைலம் ஸ்ரீ பரமகல்யாணி அம்மன் உடனாய ஸ்ரீ சிவசைலநாத சாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜையுடன் கும்பாபிஷேக ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், 9.30 மணிக்கு வாஸ்துசாந்தி, மாலை 4.30 மணிக்கு மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கடஸ்தாபனம், 6.30 மணிக்கு முதற்கால யாகபூஜைகள், 8.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும்,  செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 11.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 8.30 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும், புதன்கிழமை காலை 9 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, 11 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, 6 மணிக்கு ஐந்தாம் கால யாகபூஜை, இரவு 8 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனையும் நடைபெற்றது. 

ஜூன் 23 -ம் தேதி வியாழக்கிழமை கும்பாபிஷேகத்தன்று காலை 7.45 மணிக்கு ஆறாம் கால யாகபூஜை 9 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, கடம்புறப்பாடு, 10 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், சிவன் மற்றும் அம்மன் மூலஸ்தான கோபுரக் கலசம் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை பிரசாதம் வழங்குதல் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. மாலை திருக்கல்யாணம், இரவு சாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கும்பாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர். 

கும்பாபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், சிம்சன் குழுமத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள், பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments