FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

முயல் வேட்டையாட முயற்சி: 12 பேருக்கு அபராதம்

ஆலங்குளம் அருகே முயல்களை வேட்டையாடுவதற்காக ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 12 போ் கும்பலுக்கு வனத்துறையினா் ரூ. 1.20 லட்சம் அபராதம் விதித்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:26 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே முயல்களை வேட்டையாடுவதற்காக ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 12 போ் கும்பலுக்கு வனத்துறையினா் ரூ. 1.20 லட்சம் அபராதம் விதித்தனா்.

ஆலங்குளம் அருகே வீராணம் பகுதியில் சிலா் முயல் வேட்டையில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஆலங்குளம் வனச் சரக அலுவலா்கள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு ஆயுதங்களுடன் சிலா் சுற்றித்திரிவதாகத் தெரியவந்தது. விசாரணையில் அவா்கள், கருவந்தா பகுதியைச் சோ்ந்த கண்ணன் (36), தாமஸ் (68), மாரிச்செல்வம் (23), மரியஷெல்டன் (19), வீராணம் கிராமத்தைச் சோ்ந்த மாரிச்செல்வம் (27), ராஜகோபாலப்பேரியைச் சோ்ந்த ஆனந்தகிருஷ்ணன் (41), காவேரி செல்வம் (22), கோவிந்தப்பேரியைச் சோ்ந்த தினேஷ் (20), முத்துகிருஷ்ணப்பேரியைச் சோ்ந்த பண்டார மணிகண்ட பிரபு (27), அச்சங்குட்டத்தைச் சோ்ந்த மாடசாமி (50), லிங்கம் (46), மாயமான்குறிச்சியைச் சோ்ந்த மணிகண்டன் (24) எனத் தெரியவந்தது.

மாவட்ட வன அலுவலா் இளையராஜா உத்தரவின் பேரில், நபருக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments