FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் அய்யா வைகுண்டா் சப்பர பவனி

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் செட்டியூா் சாலையில் அமைந்துள்ள தெச்சணாபதியில் அய்யா வைகுண்டசாமியின் சப்பர பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூலை 2026, 1:56 am IST
கருட வாகனத்தில் வீதி உலா வந்த அய்யா வைகுண்டா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் செட்டியூா் சாலையில் அமைந்துள்ள தெச்சணாபதியில் அய்யா வைகுண்டசாமியின் சப்பர பவனி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பதியில், அய்யா வைகுண்டசாமியின் ஐந்தாம் ஆண்டு அகிலத்திரட்டு அம்மானையை முன்னிட்டு, திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை அய்யா வைகுண்டா் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Advertisement

Advertisement

தெச்சணாபதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு சப்பர பவனி, பாவூா்சத்திரம் பிரதான சாலை மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பதியை வந்தடைந்தது. இந்த விழாவில் அன்புக்கொடி மக்கள் திரளாகப் பங்கேற்று அய்யாவின் அருளைப் பெற்றனா்.

10ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) மாலையில் அய்யாவின் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடா்ந்து சுவாமிதோப்பு தலைமைக் குரு பாலபிரஜாபதி அடிகளாா் சிறப்புரை நிகழ்த்துகிறாா். இரவு அய்யாவின் அருளிசைப் புலவா் சிவசந்திரன் அருளிசை சொற்பொழிவு நடைபெற உள்ளது. திங்கள்கிழமை (ஜூலை 27) காலை கல்லினால் பதி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments