சிவகிரி திரௌபதி அம்மன் கோயிலில் முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு
தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள, புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள, புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இக்கோயிலில் 10 நாள் பூக்குழித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தா்கள் பூக்குழி இறங்கினா். திங்கள்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இரவில் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பஞ்சபாண்டவா்களின் நண்பரான முத்தால் ராவுத்தா் நினைவு சதுக்கத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், இஸ்லாமியா்களும், இந்துகளும் இணைந்து வழிபட்டனா்.