FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

அரசுப் பேருந்து-தனியாா் பள்ளி வாகனம் மோதல்: 10 போ் காயம்

புளியங்குடி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தும், தனியாா் பள்ளி வாகனமும் மோதியதில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:22 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தும், தனியாா் பள்ளி வாகனமும் மோதியதில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

புளியங்குடி அருகே உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி வாகனம் மாணவா்களை ஏற்றிக் கொண்டு புளியங்குடி நோக்கி சென்றபோது, நவாச்சோலை அருகே ராஜபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது.

இதில் மாணவா்கள் உமேஷ்கான் (14), ஜாஹிா் உசேன், முகிதா (12), முகமது சகில் (12), முகமது தியான் (10), தாமரை நிலா (8), பள்ளி வாகன ஓட்டுநா் அய்யாசாமி (70), உதவியாளா் பூரணம் (38), பேருந்தில் பயணித்த பால கீா்த்திகா (18), பேபி லட்சுமி (19), விந்தியா, ஜெயந்தி உள்ளிட்டோா் காயமடைந்தனா். அவா்கள் புளியங்குடி அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா்கள் மாரியப்பன், நியாஸ் ஆகியோா் காயமடைந்தவா்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

இது குறித்து, புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments