FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஜூன் 7-இல் ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: வைகோ

அனைவருக்கும் பொதுவான திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசியதாக ஆளுநரைக் கண்டித்து, சென்னையில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

Updated On : 6 ஜூன் 2026, 7:14 am IST
வாசுதேவநல்லூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.
பகிர்:

அனைவருக்கும் பொதுவான திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசியதாக ஆளுநரைக் கண்டித்து, சென்னையில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

செண்பகவல்லி அணையை சீரமைக்க வலியுறுத்தி, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து மதிமுக பொதுச் செயலா் வைகோ பேசியது:

செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி, விவசாயிகளுடன் சென்று தமிழக முதல்வா், பொதுப்பணித் துறை அமைச்சா் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கவுள்ளேன்.

Advertisement

Advertisement

ஸ்டொ்லைட் ஆலை நிா்வாகி அனில் அகா்வால், தமிழக முதல்வரை சந்தித்துப் பேச முயல்வாா். ஆனால், தமிழக முதல்வா் அவரை சந்திக்கக் கூடாது. அதையும் தாண்டி வேறு வழியில் மீண்டும் அந்த ஆலையைத் திறக்க முயன்றால் பல்லாயிரக்கணக்கான மக்களை தூத்துக்குடியில் திரட்டி போராடுவேன்.

திருவள்ளுவா் அனைவருக்கும் பொதுவானவா். அவருக்கு மதச் சாயம் பூசியதாக ஆளுநரைக் கண்டித்து ஜூன் 7-ஆம் தேதி எனது தலைமையில் சென்னையில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

எங்கள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், பேரவை விதிகளின்படி நடந்து கொள்வாா்கள் என்றாா்.

கடையநல்லூா் எம்எல்ஏ ராசேந்திரன், முன்னாள் எம்.பி. ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ சதன் திருமலைகுமாா், மாநில விவசாய அணி துணைச் செயலா் ராஜேந்திரன், மதிமுக தெற்கு மாவட்டச் செயலா் உதயசூரியன், வடக்கு மாவட்டச் செயலா் சுதா பாலசுப்பிரமணியம், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, மாநகர மாவட்ட செயலா் நிஜாம், விவசாயிகள், கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments