குற்றாலம் சாரல் திருவிழாவில் நீச்சல், வில்வித்தை போட்டிகள்
குற்றாலம் சாரல் திருவிழாவின் 5 ஆம்நாளான புதன்கிழமை நீச்சல் போட்டி மற்றும் வில்வித்தை போட்டிகள் நடைபெற்றன.
குற்றாலம் சாரல் திருவிழாவின் 5 ஆம்நாளான புதன்கிழமை நீச்சல் போட்டி மற்றும் வில்வித்தை போட்டிகள் நடைபெற்றன.
குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சிக்குச் சொந்தமான நீச்சல்குளத்தில் நடைபெற்ற போட்டியை மாவட்ட சுற்றுலாஅலுவலர் நெல்சன், சிறப்புநிலை பேரூராட்சி செயல்அலுவலர் கனகராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
நீச்சல் போட்டியில் 8 வயதிற்கு உள்பட்ட பிரிவினருக்கான போட்டியில் அனன்யா, அக்ஷா ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பெற்றனர். 12 வயதிற்கு உள்பட்ட பிரிவினருக்கான போட்டியில் செல்வபிரியா யாழினி, பிரியதர்ஷினி ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர். 14 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவு போட்டியில் ஹிதியா பௌஷியா முதலிடம் பெற்றார். 16 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் ஷாசுவதா, அபிஷா ஏஞ்சலினி ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் 6 வயதிற்கு உள்பட்ட பிரிவில் ராமசந்திர ராகுல், செல்வகுமார் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பெற்றனர். 8 வயதிற்கு உள்பட்ட பிரிவில் ஜெபின், தானுவர்ஷன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர். 12 வயதிற்கு உள்பட்ட பிரிவில் அபைகிருஷ்ணா, ஜென்சன்ஆசிர் ராஜ்பாலன், குமார்பெருமாள் ஆகியோரும், 14 வயதிற்கு உள்பட்ட பிரிவில் அப்துல் ரகுமான், தினேஷ் அரவிந்த், சிவானந்தன் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பெற்றனர். 18 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் குருலால், சுப்பையா ஆகியோர் முதல் இரண்டு இடங்களையும், பொதுப்பிரிவு போட்டியில் பிரவீன், ராம்குமார், மகேந்திரன் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றனர்.
குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வில்வித்தை போட்டியை கல்லூரி முதல்வர் திரிபுரசுந்தரி தொடங்கிவைத்தார். பெண்கள் பிரிவில் 8 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் மீனாள், உமர் சுலைமான், சந்தியா ஆகியோரும், 10 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் வனஜாஸ்ரீ, ஹசினா, அனிஷா பேகம் ஆகியோரும், 12 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் சபீரா, ஆனந்தநாயகி, தர்ஷினி ஆகியோரும், 18 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் ஷிராஜில் பாத்திமா, வசுந்தராதேவி, நந்தினி ஆகியோரும், 19 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் திவ்யா, பேச்சியம்மாள், திவ்யாமனிஷா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பெற்றனர். 20 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் பிரீத்தா, சுபைதா நஸ்ரின் ஆகியோர் முதல் இரண்டு இடங்களையும், 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ஏஞ்சலின் சாரா, விஜயா, சாவித்திரி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் 6 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் ஜின்னா யூசுப் முதலிடமும், 8 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் தயானந்த், ஆஷிக், முகம்மது நவீத் ஆகியோரும், 10 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் முகம்மது ஜின்னா, நவ்பால், முகம்மது அஷ்கர் ஆகியோரும், 12 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் முகம்மது தனிஷி, வாவா யாகையா, முகம்மது ஹாசன் ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
ரிகால் வகை போட்டியில் 8 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் ஆர்ஷித் ஜனிஸ், ஸ்ரீவத்சன், முகம்மது நவீன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்றனர். 10 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் விவின் ஹால்ஸ்டன் முதலிடம் பெற்றார்.
இந்தியன் ஸ்டைல் பிரிவில் ஜீவன் சிவா, கிருஷ்ணகுமார், ஆதர்ஸ் ரக்ஷித் ஆகியோரும், 12 வயதிற்கு உள்பட்டோருக்கான பிரிவில் சிவத்யா, ஆனந்தயோகேஷ், தர்ஷன், 12 வயதிற்கு உள்பட்டோருக்கான ரிகால் ஸ்டைல் பிரிவு போட்டியில் ஷேஷவர்தன், பிரதாப், யுன்ஸ்ரீஹரா ஆகியோரும், 18 வயதிற்கு உள்பட்டோருக்கான இந்தியன் ஸ்டைல் பிரிவில் சக்திராஜன், மகேஷ்ராம், சிவபிரகாஷ் ஆகியோரும், 19 வயதிற்கு உள்பட்டோருக்கான காம்பவுண்ட் பிரிவு போட்டியில் தீபன்கர், நிதின், கமல் ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
14 வயதிற்கு உள்பட்டோருக்கான ரிகால் பிரிவில் ரால் பேம்டன், ஆண்டனி ஜெனிலால் ஆகியோர் முதல் இரண்டு இடங்களையும், இந்தியன் ஸ்டைல் பிரிவில் ஹம்ஷா ராஷிக் முதலிடமும், பேஸ் பவுல் வகை போட்டியில் தனிஷ் தீபன்ஹர் முதலிடமும் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடைபெற்றது. தென்னக பண்பாட்டு மைய இயக்குநர் ஜோசப் தைரியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து இளங்கோவன் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் கலை பண்பாட்டு துறை உதவி இயக்குநர் சுந்தர், செயர்பொறியாளர் கரோலின்ராஜாசிங், ஆனந்த், செயற்பொறியாளர்கள் நாகராஜன், அருள், கற்பகவிநாயகசுந்தரம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கல்யாணசுந்தரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரியசகாய அந்தோணி, செங்கோட்டை நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் மகாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் கனகராஜ் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.