பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அனுமதி அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! கே.சி. வேணுகோபால்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்?
தில்லியில் பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை மூலம் தடியடி நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (ஜூலை 26) தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? யாருடைய அனுமதி பெற்று இவை பயன்படுத்தப்பட்டன? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என ஏராளமான கேள்விகளை வேணுகோபால் முன்வைத்தார்.
Advertisement
Advertisement
அவர் பேசியதாவது: மாணவர் போராட்டத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்கொண்டது தில்லி காவல்துறை. சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்ட துணை ராணுவப் படைகளும் களமிறக்கப்பட்டன. பெல்லட் குண்டுகள் ஏன் பயன்படுத்தப்பட்டன? எந்த வகையான ஆயுதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது? யாருடைய உத்தரவின் பேரில் அவை பயன்படுத்தப்பட்டன? அது உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரிலா?
ஜென் ஸி இளைஞர்களைக் குறிப்பிட்டுப் பேசி விடியோ வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அவர்கள் மீது சிறிதேனும் அக்கறை இருந்தால், அவர்களுக்கு நேர்ந்த நிலைமை குறித்து அவர் பேசியிருக்க வேண்டும். தன் கண் முன்பே இத்தகைய கொடூரமான சம்பவம் நடந்த பிறகும் மோடி மெளனமாக இருக்கிறார். நாட்டு மக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோருகின்றனர். நாங்களும் அதையே வலியுறுத்துகிறோம்.
இது எந்தவொரு தனிப்பட்ட தளத்திற்கான பிரச்னை அல்ல. இது ஒரு கூட்டுப் பிரச்னை. இந்த பிரச்னையின் பங்கேற்கும் யாரையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. காங்கிரஸ் முழு நம்பிக்கையுடன் உள்ளது. மாணவர்கள் எழுப்பிய பிரச்னைக்கு முழு வெளிப்படைத்தன்மையுடன் ஆதரவாக காங்கிரஸ் நிற்கிறது எனக் குறிப்பிட்டார்.
Beaten worse than rabid dogs K C Venugopal demands PMs apology over police crackdown on students
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.