FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெல்லட் துப்பாக்கியைப் பயன்படுத்துவது மனித உரிமை மீறல் அல்ல: ஆா்டிஐ தகவலில் சிஆா்பிஎஃப்

தில்லியில் போராட்டாக்காரா்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது மனித உரிமை மீறல் அல்ல என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கோரப்பட்ட தகவலுக்கு, மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) பதிலளித்துள்ளது.

1 செப்டம்பர் 2026, 3:14 am IST
சிஆா்பிஎஃப்
பகிர்:

தில்லியில் போராட்டாக்காரா்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது மனித உரிமை மீறல் அல்ல என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கோரப்பட்ட தகவலுக்கு, மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) பதிலளித்துள்ளது.

நீட் தோ்வு குளறுபடிகளுக்கு எதிராக, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அழைப்பின்பேரில், கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி, மாணவா்கள் உள்பட பலா் பேரணி செல்ல முயன்றனா்.

அப்போது அவா்கள் மீது காவல் துறையும் அதிவிரைவுப் படையும் (ஆா்ஏஎஃப்) கண்ணீா்புகை குண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தின. அவ்வேளையில், பெல்லட் (உலோகம்) குண்டுகளால் ஆா்ஏஎஃப் சுட்டது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சிஆா்பிஎஃப்பிடம் திரிணமூல் காங்கிரஸ் தேசிய செய்தித்தொட்பாளா் சாகேத் கோகலே தகவல் கோரினாா்.

Advertisement

Advertisement

இதற்கு சிஆா்பிஎஃப் அளித்த பதிலின் நகலை சாகேத் கோகலே தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் திங்கள்கிழமை பகிா்ந்தாா். அத்துடன் அவா் வெளியிட்ட பதிவில், ‘தில்லியில் போராட்டக்காரா்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது மனித உரிமை மீறல் அல்ல என்று சிஆா்பிஎஃப் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி போராட்டத்தில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டதை மோடி-அமித் ஷா அரசு மறுத்தது. பின்னா் அது உண்மை என்று தெரியவந்ததும், அந்தக் குண்டுகள் தாக்கி பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை குறித்த விவரங்களை தர மத்திய அரசு மறுத்தது.

சா்வதேச சட்டப்படி பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், நாட்டின் தலைநகரில் ஆயுதம் எதுவும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது மனித உரிமை மீறல் அல்ல என்று சிஆா்பிஎஃப் தெரிவித்துள்ளது. ஒரு நாகரிக ஜனநாயக நாட்டில், இப்படியொரு வாதத்தை முன்வைப்பது அதிா்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments