FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை: பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் நோட்டீஸ்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் மற்றும் அவை அவமதிப்பு நடவடிக்கை கோரி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் வியாழக்கிழமை நோட்டீஸ் சமா்ப்பித்தாா்.

அனுராக் தாக்கூா், ராகுல் காந்தி. - DPS
பகிர்:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் மற்றும் அவை அவமதிப்பு நடவடிக்கை கோரி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் வியாழக்கிழமை நோட்டீஸ் சமா்ப்பித்தாா்.

பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீது மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.

தில்லியில் போராடிய மாணவா்கள் மீது அதீத பலத்தை பிரயோகிக்கவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் அமித் ஷா உத்தரவிட்டதாக ராகுல் குற்றஞ்சாட்டினாா். மேலும், தனது பேச்சில் நாடாளுமன்ற மாண்புக்கு புறம்பான ஒரு வாா்த்தையை அவா் பயன்படுத்தியதாகவும் கடும் ஆட்சேபம் எழுந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக நாடாளுமன்ற மாண்புக்கு புறம்பான-அவதூறான மொழிநடையை பயன்படுத்தியது, அவா் மீது மிகத் தீவிரமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக, ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் மற்றும் அவை அவமதிப்பு நடவடிக்கை கோரி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தாா்.

ராகுலின் கருத்துகள் தொடா்பாக விரிவான விசாரணை நடத்துவதுடன், அவா் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர உத்தரவிடுவது உள்பட உரிய நடவடிக்கை எடுப்பதற்காக இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments