தர்மேந்திர பிரதான் பதவி விலகல்! இந்திய இளைஞர்களின் வெற்றி! - காங்கிரஸ் புகழாரம்!
தர்மேந்திர பிரதான் பதவி விலகியது இந்திய இளைஞர்களின் வெற்றி என காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் பதிவு...
மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியது இந்திய இளைஞர்களின் வெற்றி என காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கடந்த ஜூன் 20 முதல் தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தி வந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது.
இதையடுத்து, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலும் நடைபெற்று வந்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) ராஜிநாமா செய்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகியது இந்திய இளைஞர்களின் வெற்றி என காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“திறனற்ற, ஊழல்மிகுந்த மற்றும் குற்றவாளியான தர்மேந்திர பிரதானை இளைஞர்களின் சக்தி பதவி விலக செய்துள்ளது.
இது, இந்த அமைப்பு பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தியவர்களுக்கும், அனைத்தும் மக்களுக்குமான வெற்றி. நீட் வினாத்தாள் கசிந்தது முதல் ராகுல் காந்தி மத்திய கல்வி அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி வந்தார்.
எங்களின் மற்ற நிபந்தனைகள் - எங்கள் மாணவர்களைத் தாக்கியவர்களுக்கு தண்டனை மற்றும் எங்கள் மாணவர்கள் எதிர்கொண்ட வன்முறைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் மன்னிப்பு.
இந்த அரசை அடிபணிய வைத்த நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மாபெரும் சல்யூட்” எனக் கூறப்பட்டுள்ளது.
Congress has stated that Dharmendra Pradhan stepping down from the post of Education Minister is a victory for India's youth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.