FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருணாநிதி மறைவு: கட்சியினர் அஞ்சலி

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி மறைவையொட்டி திருநெல்வேலியில் பல்வேறு கட்சிகள் சார்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி மறைவையொட்டி திருநெல்வேலியில் பல்வேறு கட்சிகள் சார்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வண்ணார்பேட்டையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு ஏஐடியூசி சங்கத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொமுச மாநில அமைப்புச் செயலர் ஏ.தர்மன், சிஐடியூ மாநில நிர்வாக குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்டோர் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இக் கூட்டத்தில் ஏஐடியூசி பொதுச்செயலர் என்.உலகநாதன், துணைப் பொதுச்செயலர் பி.சுடலைமுத்து, ஏ.சுப்பிரமணியன், ஏ.மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே சேவியர்காலனியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்டச் செயலர் கே.எம்.ஏ.நிஜாம் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலர் தி.மு.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வரலாற்று ஆய்வாளர் செ.திவான், விவசாய அணி நிர்வாகி கல்லத்தியான், நிர்வாகிகள் மணப்படைவீடு மணி, ஷேக் அகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாளையங்கோட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு முன்னாள் மாமன்ற உறுப்பினர் உமாபதிசிவன் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜீவ்காந்தி, திமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் கமாலூதீன், மைதீன், அந்தோனிசெல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பேட்டையில் மெளன ஊர்வலம்: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைவையொட்டி பேட்டையில் மெளன ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
பேட்டை வியாபாரிகள் சங்கம், அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் சுல்தான் அலாவுதீன் தலைமை வகித்தார். பொருளாளர் மணி, துணைச் செயலர் லாலாகுமார், துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பேட்டை மீனாட்சி திரையரங்கில் தொடங்கிய மெளன ஊர்வலமானது நகராட்சி பேருந்து நிறுத்தம், காவல் நிலையம், ரொட்டிக்கடை பேருந்து நிறுத்தம் வழியாக பேட்டை செக்கடியை வந்தடைந்தது. அதிமுக மாவட்டப் பிரதிநிதி ராமலிங்கம், திமுக நிர்வாகி வக்கீல் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments