FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வணிகவியல் கல்வி மேம்பாடு சுந்தரனார் பல்கலை.- ஐசிஎஸ்ஐ புரிந்துணர்வு ஒப்பந்தம்

வணிகவியல் கல்வி மேம்பாடு தொடர்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஐசிஎஸ்ஐ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

வணிகவியல் கல்வி மேம்பாடு தொடர்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஐசிஎஸ்ஐ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பல்கலைக்கழக பதிவாளர் ச.சந்தோஷ் பாபு, ஐசிஎஸ்ஐ நிறுவன துணைத் தலைவர் அகல்டா ராவ் ஆகியோர் துணைவேந்தர் கி.பாஸ்கர் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
 ஐசிஎஸ்ஐ மதுரை பிரிவு தலைவர் பிரேம்குமார், செயலர் ராஜா, வணிகவியல் துறை பேராசிரியர்கள் ஆகியோர் ஒப்பந்தத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற தன்னாட்சிப் பெறாத கல்லூரிகளில் பி.காம் படிப்பில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கம் மற்றும் ஐசிஎஸ்ஐ விருது வழங்கப்படும். 
மேலும் முதல் மூன்று இடம்பெறும் பி.காம் மாணவர்களுக்கு ஐசிஎஸ்ஐ நிர்வாக படிப்பில் பதிவு கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கும் விழா நடத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments