FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாரல் மழை பெய்தாலும் கலையாத கூட்டம்

சுதந்திர தினத்தையொட்டி மாநகர பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

சுதந்திர தினத்தையொட்டி மாநகர பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகர மக்களின் வேண்டுகோளின்படி வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றதால் கூட்டம் அதிகமாக இருந்தது. சாரல் மழை பெய்து கொண்டிருந்தாலும் அதை பொருள்படுத்தாமல் பொதுமக்கள், மாணவர்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தனர்.
தேசியக்கொடியேற்றியதும் கொடியின் நிறத்தில் பலூன்களை ஆட்சியர் பறக்கவிட்டார். அப்போது மாணவர்கள் உற்சாகத்தோடு சப்தமிட்டனர்.மைதானத்தின் வெளியே தேசியக்கொடிகள், சட்டைகளில் பொருத்தும் வகையில் இந்தியா, தேசியக்கொடி வடிவிலான பொத்தான்கள் விற்பனை சூடுபிடித்தது.
வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சியில் குதிரை சவாரி இடம்பெற்றதை சிறுவர்-சிறுமிகள் ஆரவாரத்தோடு வரவேற்றனர். இளைஞர்கள் குதிரைகளின் அருகே தேசியக்கொடியேந்தி சுயப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
குறிச்சி கணேசமூர்த்தி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பழங்கால விளையாட்டுகளை நினைவூட்டும் வகையில் கிட்டிப்புல், பம்பரம், சைக்கிள், டயர் வண்டி, கோலிக்குண்டு உள்ளிட்டவற்றுடன் நடத்திய விழிப்புணர்வு நடனம் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments