FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பாளை. அம்மன் கோயிலில் திருட்டு

பாளையங்கோட்டையில் அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 8:41 am IST
பகிர்:

பாளையங்கோட்டையில் அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பாளையங்கோட்டை, கோட்டூர் சாலையில் பாளையங்கால்வாய் கரையோரம் அருள்மிகு உச்சினிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த வாரம் கொடை விழா நடைபெற்றது. இந்நிலையில் சனிக்கிழமை மாலையில் பூஜை முடிந்ததும் நிர்வாகிகள் கோயிலை பூட்டிச் சென்றனராம். ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து பார்த்தபோது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments