FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஓடிடியில் காணக் கிடைக்கும் மனதை இதமாக்கும் ஃபீல் குட் படங்கள்!

ஓடிடியில் காண வேண்டிய ஃபீல் குட் படங்கள் குறித்து....

Updated On : 28 ஜூலை 2026, 1:57 pm IST
ஃபீல் குட் படங்கள். - படம்: எக்ஸ்
பகிர்:

ஓடிடி தளங்களில் காணக் கிடைக்கும் தமிழ் ஃபீல் குட் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

மெய்யழகன்

பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மெய்யழகன்.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

Advertisement

Advertisement

29

ரத்னகுமார் இயக்கத்தில் கதாநாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருந்த திரைப்படம் 29.

10 பகுதிகளாக பிரிக்கப்பட்ட இப்படம், 29 வயதான இளைஞனின் வாழ்க்கைப் போராட்டத்துடன் காதலும் இணையும் போது ஏற்படும் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்து மகிழலாம்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.

இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக நடித்துள்ளார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ், உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் நடிகர் தனுஷும் நடித்துள்ளார்.

டிராகன்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

இன்றையகால இளைஞர்களுக்கு ஏற்றப்படி கதையும் காட்சிகளும் இருந்ததால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓஹோ எந்தன் பேபி

நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்தி வெளியான திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்க, மிதிலா பால்கர், கருணாகரன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.

டாடா

ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

96

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘96’.

பள்ளியிலிருந்து பேரிளம் பருவம் வரை தொடரும் நாயகனின் காதலை பல உணர்ச்சிகளுடன் இயக்குநர் பிரேம் குமார் உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், சோனி லைவ் ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.

ஓ மை கடவுளே 

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே.

நகைச்சுவை மற்றும் காதல் கலந்து ஃபீல் குட் திரைப்படமாக உருவான இந்தப் படம், அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

இறுகப்பற்று

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, மாநகரம் புகழ் ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும், நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்த திரைப்படம் இறுகப்பற்று.

3 ஜோடிகளின் காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

திருச்சிற்றம்பலம்

இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

summary

Let us take a look at the Tamil feel-good movies available on OTT platforms.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments