FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பேட்டையில் வாஜ்பாய்க்கு பாஜகவினர் அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, பேட்டையில் அவருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 8:42 am IST
பகிர்:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, பேட்டையில் அவருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சி 46, 47 ஆவது வார்டு பாஜக சார்பில்,  பேட்டை காவல் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் மண்டலத் தலைவர் ஆனந்தராஜ், முன்னாள் கவுன்சிலர் பொன் அழகுராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மண்டல பொதுச்செயலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். வாஜ்பாயின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வாய்பாய் ஆட்சியின் சாதனைகள் குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில், பாஜக நிர்வாகிகள் முருகன், வெங்கட்ராகவன், கோபால், சீதாலட்சுமி, சங்கர், முத்துநாகேஷ்வரன், சிவசக்திலிங்கம், சிவசுப்பிரமணியன், மகேஷ், ஹரிபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments