உயர்கல்வி சவால்கள்: நெல்லையில் கருத்தரங்கு
பாளையங்கோட்டையில் "உயர்கல்வியும், இன்றைய சவால்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் "உயர்கல்வியும், இன்றைய சவால்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்தியாவிற்கான மக்கள் இயக்கம், மூட்டா அமைப்பு, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு இந்தியாவிற்கான மக்கள் இயக்கம் அமைப்பின் தலைவர் எஸ். ராமகுரு தலைமை வகித்தார்.
கருத்தரங்கில், உயர்கல்வி பயிலுவதில் காணப்படும் சவால்கள் குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் மாநில பொதுச்செயலர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலச் செயலர் கே. பிச்சகனி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் இரா. நாறும்பூநாதன், மூட்டா அமைப்பின் மண்டலத் தலைவர் ஆர். முருகேசன், காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கத் தலைவர் ஆர். மதுபால், இந்திய மாணவர் சங்கத் தலைவர் தினேஷ் ஆகியோர் பேசினர்.
மூட்டா பொதுச்செயலர் எம். நாகராஜன் வரவேற்றார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்டச் செயலர் செ. முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.