FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் காவலர் தேர்வுக்கு உடல்திறன் பயிற்சி

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில், காவலர் உடல்தகுதி தேர்வுக்கு உடல்திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில், காவலர் உடல்தகுதி தேர்வுக்கு உடல்திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட காவலர்-2 எழுத்துத் தேர்வில், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 600-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு பதவிக்கு 5 பேர் என்ற விகிதத்தில் உடல்தகுதி திறன் போட்டி வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களுக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் உடற்கல்வி ஆசிரியரால் உடல்திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி  அகாதெமியில் இருந்து உடல்தகுதி தேர்வில் பங்கேற்கவிருக்கும் மாணவர்களை வாழ்த்திய சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனர் து.சுகேஷ் சாமுவேல்,  டி-சர்ட்களையும் வழங்கினார். உடல்தகுதி திறன் தேர்வின்போது மதிப்பெண்கள் வழங்கப்படும் முறை குறித்து பயிற்சி ஆசிரியர் வி.அந்தோணி பட்டு விளக்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments