தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை
தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மனு அளித்தனர்.
தமிழ் வழியில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் ஆங்கில வழியில் இளங்கலை பாடப்பிரிவில் சேரும் மாணவர்கள், பல்கலைக்கழகத் தேர்வை தமிழில் எழுதுவது நடைமுறையில் இருந்து வந்தது.
இந்நிலையில், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து புதன்கிழமை தூத்துக்குடி காமராஜர் கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அபிஷேகப்பட்டியில் பல்கலைக்கழகம் முன் திரண்டனர்.
தேர்வை தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர், மாணவர்கள் குழுவினர் பல்கலைக்கழகப் பதிவாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.