FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நான்குனேரி ஆசிரியர் கூட்டுறவு சங்கம் ரூ. 18 கோடி கடனுதவி

நான்குனேரி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் நிகழ் நிதியாண்டில் ரூ. 18 கோடிக்கு கடனுதவி வழங்கியுள்ளது.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

நான்குனேரி ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் நிகழ் நிதியாண்டில் ரூ. 18 கோடிக்கு கடனுதவி வழங்கியுள்ளது.
இச்சங்கம் 1977இல் தொடங்கப்பட்டது. 396 உறுப்பினர்களுடன் செயல்படும் இச்சங்கத்தின் பங்குத் தொகை ரூ. 2.40 கோடி, சிக்கன நிதி ரூ. 3.66 கோடி, தொடர் வைப்பு நிதி ரூ. 27 லட்சம் உள்ளது. உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டியில் 120 மாத தவணைகளில் ரூ. 12 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது.
நிகழாண்டில், குறுகிய கால கடன் உள்பட ரூ. 18 கோடிக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 40 ஆண்டுகளாக லாபத்தில் செயல்பட்டு வரும் இச்சங்கம்,  உறுப்பினர்களுக்கு ஈவுத் தொகை வழங்கி வருகிறது.
2016-17ஆம் ஆண்டுக்கான சட்டப்பூர்வ நிதி ரூ. 2.06 லட்சத்துக்கான காசோலையை சங்கத் தலைவர் டேவிட் ஜோனத்தான், மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் த.நா. பிரியதர்ஷினியிடம் வழங்கினார். துணைத் தலைவர் பாரதிதாசன், செயலர் மகாலிங்கம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இத்தகவலை, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ரா. செல்வகணேஷ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments