FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

பாளையங்கோட்டை, தியாகராஜநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் 4 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

பாளையங்கோட்டை, தியாகராஜநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீசித்தி விநாயகர் கோயிலில் 4 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி,  மஹா கணபதி ஹோமம், வருஷாபிஷேகம், கோபுர விமானம் கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. 
வருஷாபிஷேக ஆகம பூஜைகளை வெங்கிடசுப்பிரமணிய பட்டர் தலைமையில் பட்டர்கள் நடத்தினர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
இரவு சீதாராம கல்யாணம் எனும் தலைப்பில் சிவ. சத்தியமூர்த்தியின் இசைப் பேருரை நடைபெற்றது. இதில், ஸ்ரீசித்தி விநாயகர் பக்த சேவா சங்கத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் என். வாகை கணேசன், நிர்வாகிகள் செல்வக்குமார், முருகன், முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜைகள், பக்தி இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments