21இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 21) நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 21) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிசம்பர் மாதத்துக்கான மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 21) நடைபெறுகிறது. ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர்.
கூட்டத்தில் இம்மாவட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.